மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவிகளுக்கு மயக்கவியல் துறை பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது. இதற்கு பல்வேறு மருத்துவர்கள் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். மாணவ மாணவிகளிடம் கேட்டபோது, இது தொடர்பாக சென்னையில் சுகாதார செயலாளர் ககன்தீப் சிங்பேடியிடம் நேரடியாக சென்று புகார் அளித்துள்ளோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர். இந்நிலையில் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி நேற்று காலை 8 மணிக்கு மாணவிகளிடம் விசாரணை தொடங்கிமாலை 4 மணி வரை நடந்தது. விசாரணையில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் பற்றி மாணவிகள் விளக்கம் அளித்தனர். விசாரணை முடிந்த வெளியே வந்த மாணவிகள் கூறும்போது, ‘மயக்கவியல் துறை பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்’ என்றனர்.

The post மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை appeared first on Dinakaran.

Related Stories: