வெறிநாய் கடிக்கு 60 பேர் பலி அவுரங்காபாத்தில் மக்களை குதறும் தெருநாய்கள்-7 ஆண்டில் 51,236 பேர் பாதிப்பு

அவுரங்காபாத் : அவுரங்காபாத்தில் கடந்த 2013-14 முதல் 7 ஆண்டில் வெறிநாய்க் கடிக்கு 60 பேர் பலியாகியுள்ளனர். 51,236 பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  அவுரங்காபாத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அவுரங்காபாத் என்-11 செக்டார் பகுதியை சேர்ந்த பெண், சமீபத்தில் நாய்க்கடிக்கு ஆளானவர். வெறிநாய் கடித்திருந்ததால், அவர் சில வாரங்களாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார்.

   இவர் மட்டுமல்ல, இதபோல் ஏராளமானோர் அவுரங்காபாத்தில் வெறிநாய் கடிக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், அவுரங்காபாத்தில் கடந்த 2013-14 நிதியாண்டு முதல் கடந்த செப்டம்பர் வரை மட்டும்  51,236 பேர் நாய்க்கடிக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுள்ளனர். வெறிநாய் கடியால் 60 பேர் உயிரிழந்துள்ளனர், என்றனர்.

 இதை தடுக்க, 37,858 நாய்களுக்கு தடுப்பூசிகள், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். நாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்வதில் ஊழல் நடப்பதாக எம்பி மேனகா காந்தி குற்றம் சுமத்தியதை தொடர்ந்து, இப்பகுதியில் இதுதொடர்பாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இருப்பினும், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளை நாய்களுக்கு மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: