பான் பசிபிக் ஓபன் சாம்பியன்

டோக்கியோவில் நடந்த பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் கனடா வீராங்கனை கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி, மெக்சிகோவின் கியுலியானா ஆல்மாஸுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் நிகோல் மார்டினஸ் - எலன் பெரஸ் (ஆஸி.) ஜோடியுடன் மோதிய டப்ரோவ்ஸ்கி - ஆல்மாஸ் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தியது.

சமீபத்தில் நடந்த சென்னை ஓபன் தொடரில் பிரேசில் வீராங்கனை லூயிசா ஸ்டெபானியுடன் இணைந்து டப்ரோவ்ஸ்கி பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பான் பசிபிக் கோப்பையுடன் ஆல்மாஸ் - டப்ரோவ்ஸ்கி உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர்.

Related Stories: