புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சின்னமான, ‘தம்பி’யை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவுகிறது. பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்கள், அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு மின்னணு ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி, ஏல விற்பனை நேற்று முன்தினம் தொடங்கியது. மோடிக்கு பரிசாக கிடைத்த சிலைகள், கோயிலின் மாதிரிகள் உள்ளிட்டவை ஏலத்தில் விடப்படுகின்றன. மொத்தம் 1,200 பொருட்கள் ஏலத்தில் இடம் பெற்றுள்ளன.
குஜராத் மாநில என்சிசி இயக்குனரகம் கடந்த ஆண்டு மோடிக்கு முன்னாள் என்சிசி மாணவருக்கான அடையாள அட்டையை வழங்கியது.