இன்று முதல் லெஜண்ட் லீக் கங்குலி கேப்டனாக களம் காணும் காட்சி ஆட்டம்

கொல்கத்தா:  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் ‘லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் 2022’  தொடர் இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்தியா கேப்டல்ஸ், மணிபால் டைகர்ஸ், பில்வாரா கிங்ஸ், குஜராத் ஜயன்ட்ஸ்  என 4 அணிகள் பங்கேற்கின்றன. இந்த  அணிகளுக்கு முறையே கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், வீரேந்திர சேவாக்  ஆகியோர் கேப்டன்களாக பங்கேற்கின்றனர். இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் முன்னணி வீரர்களும் இந்த அணிகளில் இடம் பெற்றுள்ளன.

லெஜண்ட் லீக் போட்டியின் முன்னோட்டமாக இன்று மட்டும்  சிறப்பு காட்சி ஆட்டம் நடைபெற உள்ளது. அதில் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய மகராஜாஸ் அணியும்,  இயான் மார்கன்(இங்கிலாந்து) தலைமையிலான  வேர்ல்டு ஜயன்ட்ஸ் என்ற  உலக அணியும் மோதுகின்றன. பல ஆண்டுகளுக்கு பிறகு களம் காண உள்ள கங்குலி அணியில்  கைப், பத்ரிநாத், சேவாக், அஜய் ஜடேஜா, ஹர்பஜன்  உட்பட பலர்  இடம் பெற்றுள்ளனர். மோர்கன் தலைமையிலான உலக அணியில்  கிப்ஸ், ஜான்டி ரோட்ஸ்,  காலிஸ், ஜெயசூரியா, ராம்தின், முரளிதரன், பிரட்லீ ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

இவர்கள் நாளை முதல் நடைபெற உள்ள லெஜண்ட் லீக்கின் பல்வேறு அணிகளில் இடம் பெற்றுள்ளனர். மொத்தம் 4 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ரவுண்ட் ராபின் முறையில் 16 ஆட்டங்கள் நடக்கும். இந்த ஆட்டங்கள் கொல்கத்தா, லக்னோ, டெல்லி, கட்டாக், ஜோத்பூர் ஆகிய நகரங்களில் அக்.2ம் தேதி வரை நடத்தப்படும்.  இறுதி ஆட்டம்  அக்.5ம்தேதி நடைபெறும்.

Related Stories: