நடிகர் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'திரைப்படம் நாளை வெளியாவதில் சிக்கல் இல்லை

சென்னை: நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை வெளியாவதில் சிக்கல் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு தடைவிதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்த தயாரிப்பு நிறுவனத்துடன் சமரசம் செய்து கொள்கிறோம் என இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பு தெரிவித்துள்ளது. சிம்பு நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் படம் இயக்க ரூ.2.40 கோடி முன்பணம் பெற்று ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் அதே கதையை வைத்து வெந்து தணிந்தது காடு படம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆன் இன் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. உத்திரவாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய கவுதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை வரும் செப்.21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

Related Stories: