சாலை பாதுகாப்பு டி.20 தொடர்: ஸ்டூவர்ட் பின்னி,பதான் அதிரடி இந்திய லெஜண்ட்ஸ் வெற்றி

கான்பூர்: இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்ரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்கும் சாலை  பாதுகாப்பு டி.20 கிரிக்கெட் தொடர் கான்பூரில் நேற்று தொடங்கியது. இதில் முன்னாள் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். நேற்று நடந்த முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜண்ட்ஸ், ஜான்டி ரோட்ஸ் தலைமையிலான தென்ஆப்ரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், நமன் ஓஜா 21 (18பந்து), சச்சின் டெண்டுல்கர் 16 (15பந்து) ரன்னில் வெளியேற ரெய்னா 22 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33, ஸ்டூவர்ட் பின்னி நாட்அவுட்டாக 82 (42பந்து,5பவுண்டரி,6சிக்சர்), யூசுப் பதான் 15 பந்துகளில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு 35 ரன் அடித்தனர். யுவராஜ் சிங் 6ரன்னில் அவுட் ஆனார். 20 ஓவரில் இந்தியா 4விக்கெட் இழப்பிற்கு 217 ரன் எடுத்தது.

பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்க அணியில் ரோட்ஸ் 38 (27பந்து) புட்டிக் 23 (24), வன் வ்யாக் 26 (24) ரன்னில் வெளியேற 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களே எடுததது. இதனால் இந்தியா 61 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய பவுலிங்கில் ராகுல்சர்மா3, முனாப்பட்டேல், பிரக்யன் ஓஜா தலா 2விக்கெட் வீழ்த்தினர்.ஸ்டுவர்ட் பின்னி ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்றுமாலை 3.30மணிக்கு லாரா தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ்-வங்கதேசம், இரவு 7.30 மணிக்கு வாட்சன் தலைமையிலான ஆஸ்திரேலியா, தில்சான் தலைமையிலான இலங்கை மோதுகின்றன.

Related Stories: