யுஎஸ் ஓபன் டென்னிஸ் முதல்முறையாக காலிறுதியில் காஃப், கார்சியா: நெ.1 வீரரை வீழ்த்திய நிக்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் முறையாக காலிறுதியில் விளையாட  வீராங்கனைகள் காஃப், ஆன்ஸ்,  கார்சியா, அய்லா,  வீரர்கள் நிக், கஸ்பர், கரண்  ஆகியோர் தகுதிப் பெற்றனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில்   யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை கோரி காஃப்(18வயது, 12வது ரேங்க்), சீன வீராங்கனை சுயாய் ஜங்(33வயது, 36வது ரேங்க்) உடன் மோதினார். அந்த ஆட்டத்தில் ஒரு மணி 57 நிமிடங்களில் 7-5, 7-5 என நேர் செட்களில் வீழ்த்தி  யுஎஸ் ஓபனில் மட்டுமல்ல கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றில் முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.  

கூடவே  கரோலின் கார்சியா(பிரான்ஸ்), ஆன்ஸ் ஜெபர்(துனிசியா), அய்லா டாம்யானோவிச்(ஆஸ்திரேலியா) ஆகியோரும் முதல் முறையாக யுஎஸ் ஓபன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்று ஒன்றில்  உலகின் நெம்பர் ஓன் வீரர் ரஷ்யாவின் டானில் மெத்வதேவ்(26வயது), ஆஸ்திரேலியா வீரர் நிக் கிர்ஜியோஸ்(27வயது, 25வது ரேங்க்) ஆகியோர் மோதினர்.  இரண்டு மணி 53நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தை 7-6(13-11),  3-6, 6-3, 6-1 என்ற செட்களில் நெம்பர் ஒன் வீரரை வீழ்த்தியதுடன்,  முதல் முறையாக யுஎஸ் ஓபன் காலிறுதிக்கு நிக்  முன்னேறி உள்ளார். அதேபோல் ஆடவர் பிரிவில்  கரென் கச்சனோவ்(ரஷ்யா),  கஸ்பர் ரூட்(நார்வே) ஆகியோரும் முதல்முறையாக யுஎஸ் ஓபன் காலிறுதியில் விளையாட உள்ளனர்.

Related Stories: