உலக இரட்சகர் திருத்தல விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி-ஜெய்ராஜேஸ் பள்ளி கோப்பையை கைப்பற்றியது

திசையன்விளை :   திசையன்விளை உலக இரட்சகர் திருத்தல திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை ஜெபமாலையுடன் திருப்பலியும், மாலை மறையுரையுடன் நற்கருணை ஆசீரும் நடக்கிறது. நேற்று 3ம் நாள் விழாவை முன்னிட்டு காலை விக்டர் அடிகளார் தலைமையில் திருப்பலி நடந்தது. மறைக்கல்வி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் சிறப்பித்தனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் திசையன்விளை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அனைத்து பள்ளிகளும் கலந்து கொண்டது.

 போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திருத்தல அதிபர் அந்தோனி டக்ளஸ் பரிசு வழங்கினார். போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை ஜெய்ராஜேஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பெற்றது. நிகழ்ச்சியில் அனைத்து பள்ளி விளையாட்டு ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர். மாலை அருட்திரு ஜோ தலைமையில் மறையுரை நற்கருணை ஆசீரும், தொடர்ந்து புனித தேவசகாயம் வரலாற்று நாடகமும் நடந்தது.

இன்று 4ம் திருவிழாவை ஆர்.சி.துவக்கப்பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் சிறப்பிக்கிறார்கள். காலை 5.30க்கு அருட்திரு லூசன் தலைமையில் ஜெபமாலையுடன் திருப்பலி நடக்கிறது. மாலை அருட்திரு ஜெரால்டு ரவி வழங்கும் எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள் என்ற தலைப்பில் மறையுரையும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. தொடர்ந்து பள்ளி மாணவ  மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அந்தோனி டக்ளஸ், பங்குப்பேரவை, அருட்சகோதரிகள், அன்பியங்கள், இறைமக்கள் செய்கின்றனர்.

Related Stories: