மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடல் நீச்சல் வீரர், உயிர் காப்பாளராக நியமனம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கடல் நீச்சல் வீரரை உயிர் காப்பாளர் ( Life Guard ) நியமனம் செய்து பணி ஆணைணை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் நியமனம் செய்து பணி ஆணையிணை வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் உலக புகழ்பெற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மிக முக்கிய இடமாக திகழ்ந்து வருகிறது. நாள்தோறும் தமிழ்நாடு மட்டுமில்லாமல், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் ஏராளமானோர் கடலில் இறங்கி ஆபத்தை உணராமல் குளிக்கின்றனர்.

சில சமயங்களில் அவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்தநிலையில் தொடர்ந்து, மகாபலிபுரம் பகுதியில் உயிரிழப்புகள் நடைபெற்ற வருவதால், இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் , மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, உயிர் காப்பாளர் ஒருவரை நியமனம் செய்ய உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் ஒப்பந்த ஊழியர் கிருஷ்ணராஜ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிருஷ்ணராஜ் பணிநியமன ஆணையை நேரில் பெற்றுக் கொண்டார். அரசு அலுவலர்கள் உனிருந்தனர்.

The post மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடல் நீச்சல் வீரர், உயிர் காப்பாளராக நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: