கடலூரை பாலைவனமாக்கும் என்.எல்.சி வெளியேற இன்று போராட்டம்: அன்புமணி அறிவிப்பு

சென்னை: ‘‘கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக்கும் என்.எல்.சி. நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி பாமக சார்பில் இன்று போராட்டம்” நடைபெறும் என்று அன்புமணி அறிவித்துள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: சுற்றுச்சூழலை சீரழித்து கடலூர் மாவட்டத்தை பாலவனமாக்கும் என்எல்சி  நிறுவனம் தேவையில்லை என்பதுதான் கடலூர் மாவட்ட மக்களின் நிலைப்பாடு.எனவே, கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் 4ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு பாமக சார்பில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்திற்கு பாமக தலைவரான நான் தலைமையேற்க உள்ளேன்.

போராட்டத்தில் பா.ம.க. மற்றும் அதன் துணை அமைப்புகளின் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பார்கள். என்.எல்.சிக்கு நிலம் கொடுத்து ஏமாந்த மக்களும், சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் இதில் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன்.

Related Stories: