டீஸ்டா செதல்வாட்டுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்

புதுடெல்லி: குஜராத் கலவர வழக்குகளில் அப்பாவி மக்களைக் கைது செய்ய போலியான ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறி, அம்மாநில முன்னாள் டிஜிபி ஆர்.பி. ஸ்ரீகுமார், சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். டீஸ்டா, ஸ்ரீகுமார் இருவரும் இடைக்கால ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் அமர்வு  நேற்று விசாரித்தது. அப்போது, டீஸ்டா செதல்வாட்டுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் தனது பாஸ்போர்ட்டை குஜராத் உயர் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: