சின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ்; 2வது சுற்றில் இகா ஸ்வியாடெக்; மேடிசன் கீஸ் வெற்றி: நடால் அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி: அமெரிக்காவில் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் 2ம் சுற்றுப்போட்டிகள் இன்று நடந்தது. 23 வயதான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா,  6-3, 6-1 என்ற செட் கணக்கில், 28 வயதான ஸ்பெயினின் முகுருசாவை வீழ்த்தினார்.

 

அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-4,7-5 என லாட்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோவை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார். முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-4, 7-5 என அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை வென்றார். பெலாரசின் அரினா சபலென்கா , ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்காயாவை எதிர்கொண்டார்.

முதல் முதல் செட்டை 6-3 என கைப்பற்றி சபலென்கா, 2வது செட்டில் 4-1 என முன்னிலையில் இருந்தபோது காயம் காரணமாக அன்னா விலகினார். இதனால் சபலென்கா அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார். ருமேனியாவின் சிமோனா ஹாலெப், வலது தொடையில் காயம் காரணமாக விலகினார். இதனால் 2வது சுற்றில் அவருடன் மோத இருந்த ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆடவர்  ஒற்றையர் பிரிவில் 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 6-7,6-4,3-6  என்ற செட் கணக்கில் 25 வயதான குரோஷியாவின் போர்னா கோரிக்கிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

Related Stories: