வருசநாடு வழியாக சதுரகிரி செல்லும் பக்தர்கள்

வருசநாடு: தேனி மாவட்டம், வருசநாடு உப்புத்துறை வழியாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு தேனி, திண்டுக்கல், கம்பம், குமுளி, திருச்சி, தர்மபுரி, பெங்களூர், மும்பை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 5,000 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நேற்று யானைக்கஜம் மலைப்பாதை வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

 வனப்பகுதியில் வன உயிரினங்கள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் மாலை 4 முதல் அதிகாலை 6 மணி வரை பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வருசநாடு மற்றும் சாப்டூர் வனத்துறையினர் யானைக்கஜம் மலைப்பகுதியில் முகாமிட்டு பக்தர்களை கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: