3வது கப்பல் மூலம் இலங்கை மக்களுக்கு 16,595 மெட்ரிக் டன் உணவுப்பொருட்கள்

சென்னை: இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் 3வது கப்பல் மூலம் 16,595 மெட்ரிக் டன் அத்தியாவசிய பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் நேற்று 16,595 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 3வது கப்பலை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக அமைச்சர்களும் அனுப்பி வைத்துள்ளார்கள். இதுவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தவாறு 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 102 மெட்ரிக் டன் உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் இலங்கை மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்காக கப்பல் போக்குவரத்து செலவு உட்பட 196.83 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிட்டுள்ளது. இலங்கையில் நிலவி வரும் சூழலை, தொடர்ந்து கண்காணித்து அந்த மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைத்திட அனைத்து முயற்சிகளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.

Related Stories: