சாய் ஹோப் 82 ரன் குவிப்பு மேற்கு இந்திய அணி ரன் குவிப்பு

போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா-மேற்கு இந்திய கிரிக்கெட் தொடரின் 2வது ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி 37.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 200 ரன் குவித்தனர். இந்தியா-மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையே நேற்று 2வது ஒரு நாள் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவு கேப்டன் நிக்லோஸ் பூரன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஷாய் ஹோப்-கெயில்மேயர்ஸ் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் முகமது சிராஜ் பந்தை சந்திக்க முடியாமல் இரண்டு பேட்ஸ்மென்களும் திணறினர். எனினும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பவுண்டரி அடித்தனர். ஆவிஸ்கான் 3 ஓவரில் 36 ரன்கள் கொடுத்தார்.  

சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து கலக்கிக் கொண்டிருந்த மேயர் 39 ரன்(23 பந்து, ஒரு சிக்சர், 6 பவுண்டரி) விளாசி, 9வது ஓவரின் முதல் பந்தில் தீபக் ஹூடா வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பின் வந்த புரூக்ஸ்-ஹோப் ஜோடி விக்கெட் இழக்காமல் 125 குவித்த நிலையில் அக்‌ஷர் பட்டேல் பந்தில் புரூக்ஸ் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பிறகு, வந்த பிராண்டன் கிங், சாஹல் பந்தில் டக் அவுட் ஆனார். அதன் பிறகு வந்த நிகலோஸ் பூரன், ஹோப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். எனினும் 37வது ஓவர் முடிவில் மேற்கு இந்திய தீவு அணி 3 விக்கெட் இழப்புக்கு 37.2 ஓவரில் 200 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் 7 பவுலர்கள் மாறி மாறி பந்து வீசியும் மேற்கு இந்திய தீவு பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

Related Stories: