வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு தவான் கேப்டன்

மும்பை: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ள இந்திய அணிக்கு கேப்டனாக ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாத இறுதியில்  வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி ஜூலை 22ம் தேதி டிரினிடாட்டில் நடக்கும். 2வது ஆட்டம்  ஜூலை 24, 3வது ஆட்டம் ஜூலை 27ல் நடைபெற உள்ளன.

அதைத் தொடர்ந்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாட உள்ளன. இதில் 3 போட்டிகள்  ஜூலை 29, ஆக.1, 2 தேதிகளில் வெஸ்ட் இண்டீஸ் தீவு நாடுகளிலும், 2 போட்டிகள்  ஆக. 6, 7ல் அமெரிக்காவின் புளோரிடா நகரிலும் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியும் நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனான தவான், துணை கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளனர்.  

மொத்தம் 16 பேர் கொண்ட அணியில்  முக்கிய வீரர்கள்  சிலர் இடம் பெறவில்லை.  பல்வேறு தருணங்களில் கேப்னாக பதவி வகித்த ரோகித், கோஹ்லி, பும்ரா,  ரிஷப் , ஹர்திக், ராகுல் மற்றும் ஷமி  ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பன்ட்டுக்கு பதிலாக சாம்சன் விக்கெட் கீப்பர் பணியை செய்வார். இந்தியா (ஒருநாள் அணி): ஷிகர் தவான் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர்,  இஷான் கிஷன்,ஷர்துல் தாகூர்,  யஜ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப்  சிங், ருதுராஜ் கெய்க்வாட்.

Related Stories: