யு-23 ஆசிய கோப்பை பைனலில் உஸ்பெகிஸ்தான் சவுதி அரேபியா

தாஷ்கண்ட்: ஆசிய கோப்பை யு-23 கால்பந்து போட்டியின் இறுதிஆட்டத்தில் விளையாட உஸ்பெகிஸ்தான், சவுதி அரேபியா அணிகள் தகுதிப் பெற்றுள்ளன.உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்ட் உள்ளிட்ட நகரங்களில்   ஆசிய கோப்பை யு23 ஆடவர் கால்பந்து போட்டி நடக்கிறது. இந்தப்போட்டியில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன.நடப்பு சாம்பியன் தென் கொரியா காலிறுதியுடன் வெளியறேியது.அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, போட்டியை நடத்தும் உஸ்பெகிஸ்தான், ஜப்பான்  ஆகிய அணிகள் முன்னேறின. முதல் அரையிறுதியில்   ஆஸ்திரேலியா-சவுதி அரேபியா அணிகள் மோதின.   ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய சவுதி, முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.அதேபோல் 2வது அரையிறுதியில் உஸ்பெகிஸ்தான்-ஜப்பான் அணிகள் மோதின. ஆட்டம் முழுவதும் ஜப்பான் ஆதிக்கம் செலுத்தினாலும், அதன் கோலடிக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனால் தட்டுதடுமாறி உஸ்பெகிஸ்தான் செய்த முயற்சிகளுக்கு 2முறை பலன் கிடைத்தது. அதனால்  ஆட்டநேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற உஸ்பெஸ்கிஸ்தான் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அதனால் நாளை மறுதினம் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான்-சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன. இதற்கு முன் 2013, 2020 என 2 முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய சவுதிஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. அதே நேரத்தி்  2018ல்  இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி முதல் தடவையிலேயே உஸ்பெகிஸ்தான் கோப்பையை வென்றுள்ளது.

Related Stories: