இந்தோனேசியா பேட்மின்டன் காலிறுதியில் லக்‌ஷயா, சிந்து

ஜகர்தா: இந்தோனேசியா மாஸ்டர்ஸ பேட்மின்டன் போட்டியின் காலிறுதியில் விளையாட இந்தியாவின்  லக்‌ஷயா சென், பி.வி.சிந்து ஆகியோர் தகுதிப் பெற்றனர்.ஜகர்தாவில்  நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரர் லக்‌ஷயா சென்,  டென்மார்க் வீரர் ராஸ்மஸ் ஜெம்கே ஆகியோர்  மோதினார்.  வழக்கம் போல் அதிரடியாக விளையாடிய சென்  அடுத்தடுத்த செட்களை  21-18, 21-15 என்ற புள்ளிக் கணக்கில்  எளிதில் கைப்பற்றினார். அதனால் 54நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் 2-0 என்ற நேர் செட்களில் வென்ற சென் காலிறுதிக்கு முன்னேறினார்.இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில்  முன்னனி வீரரான  சோவ் டின் சென்(சீன தைபே) உடன் லக்‌ஷயா  சென் மோத உள்ளார்.தொடர்ந்து மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து , இந்தோனேசியாவின் கிரிகோரியா துன்ஜூங் உடன் மோதினர்.  இருவரும் சமபலத்தை காட்ட  ஆட்டம் ஒரு மணி 11 நிமிடங்கள் நீடித்தது. முடிவில் சிந்து  23-21, 20-22, 21-11 என்ற செட்களில் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories: