முருங்கப்பாக்கம் மாங்குரோவ் காடுகளில் 3.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

புதுச்சேரி :  புதுச்சேரி அரசின் அறிவியல், தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் துறை, புதுச்சேரி மாசு கட்டுப்பாடு குழுமம் மற்றும் இந்திய இளைஞர் விடுதிகள் சங்க புதுவை கிளையும் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தை ஒட்டிய சுரபுன்னை (மாங்குரோவ்) காடுகளில் தேங்கியுள்ள நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளை அகற்றும் பணி, மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. அரியாங்குப்பம் எம்எல்ஏ பாஸ்கர் (என்ற) தட்சிணாமூர்த்தி, அறிவியல், தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் துறை செயலர் ஸ்மிதா நிகழ்ச்சியை துவக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டனர். கலை மற்றும் கைவினை கிராம மண்டல இயக்குனர் கோபால் ஜெயராமன், தனியார் பவுண்டேஷன் இயக்குனர் பூபேஷ் குப்தா ஆகியோர் சதுப்பு நிலக்காடுகளின் பயன்கள், அதன் முக்கியத்துவம் குறித்து பேசினர்.

நிகழ்ச்சியில் இந்திய இளைஞர் விடுதிகள் சங்க புதுவை கிளை தலைவர் சரவணன், துணை தலைவர்கள் தரன், மனோகர், செந்தில்குமார், அவைத்தலைவர் எழிலன் லெபேல், பொருளாளர் ராசமோகன், செயலாளர் சண்முகவேலு, ஒருங்கிணைப்பு செயலாளர் ஆனந்தராஜன், தனியார் கல்லூரி முதல்வர் உதயசூரியன், கலை மற்றும் கைவினை கிராம மேலாளர் பாஸ்கர், தனியார் படகு சவாரி உரிமையாளர் குமரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் மற்றும் இந்திய இளைஞர் விடுதிகள் சங்கம், புதுவை மாநில கிளையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிரக மாநில பொறுப்பாளர் சண்முகம், காலாப்பட்டு கிளையின் பிரதிநிதி அருண் நாகலிங்கம் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இந்திய இளைஞர் விடுதிகள் சங்க கிளை உறுப்பினர்கள் பிளாஸ்டிக்  கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு, சுமார் 3.5 டன்  அளவிற்கு நெகிழிகளை சுரபுன்னை காடுகளில் இருந்து அகற்றினர்.

Related Stories: