2 வருடத்துக்கு பிறகு தொடங்கும் மோகன்லால், திரிஷா படம்

திருவனந்தபுரம்: மோகன்லால், திரிஷா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு 2 வருடங்களுக்கு பிறகு தொடங்க உள்ளது.மோகன்லால் நடிப்பில் திரிஷ்யம், திரிஷ்யம் 2 படங்களை இயக்கியவர் ஜீத்து ஜோசப். சமீபத்தில் மோகன்லால் நடித்த டுவெல்த் மேன் படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மோகன்லால், திரிஷா நடிப்பில் ராம் என்ற படத்தை உருவாக்குவதாக ஜீத்து ஜோசப் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக அதிக தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து இந்த படம் உருவாக்க முடியாததால், பல இடங்களில் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்காததால் படம் முடங்கியது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மீண்டும் இதன் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே மலையாள படத்தில் நடித்திருக்கும் திரிஷா, முதல்முறையாக மோகன்லால் ஜோடியாக நடிக்க உள்ளார்.

Related Stories: