கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலுக்‍கு 4 பேர் உயிரிழப்பு: பல லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு.. மக்கள் தவிப்பு..!!

ஒட்டாவா: கனடாவை உலுக்கிய கடும் புயலுக்கு 4 பேர் உயிரிழந்த நிலையில், பல லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர். கெனடாவின் கிழக்கு மாகாணங்களான ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் கடுமையான புயல் தாக்கியது. மேலும் இடி, மின்னலுடன் பலத்தை மழையும் பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்தன. மரங்கள் அனைத்தும் வோரோடு சாய்ந்தது. கார் உள்ளிட்ட வாகனங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்தன.

பல இடங்களில் கார்கள் மீது மரங்கள் விழுந்து நசுங்கியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. புயலால் சுமார் 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் இருளில் தவித்தனர். புயல், மழை தொடர்பான விபத்துகளில் 4 பேர் பலியான நிலையில் பலர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை அந்நாட்டு அரசு முடுக்கி விட்டுள்ளது.  

Related Stories: