திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டு வேடிக்கை பார்த்தவர் காளை முட்டிச் சாவு

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே கீழையப்பட்டியில், விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார்.சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே நாச்சியாபுரம் கீழையப்பட்டி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 200க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இளைஞர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் காளைகளை மடக்கினர். இதில் காளைகள் முட்டியதில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த திருப்புத்தூர் அருகே சிறாவயல் புதூரை சேர்ந்த கணேசன் (57) மாடு முட்டியதில் காயமடைந்தார். சிகிச்சைக்காக திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர், பரிதாபமாக உயிரிழந்தார். நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: