போதை பொருட்கள் குறித்து வருவாய்த்துறையினருக்கு விழிப்புணர்வு

திருத்தணி: ஆந்திர எல்லை கிராமங்களில் பணியாற்றி வரும் வருவாய்த்துறையினருக்கு போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கோட்டாட்சியர் தீபா கேட்டுக்கொண்டார். திருத்தணி அருகே ஆந்திர எல்லைப் பகுதிகள் வழியாக சாராயம், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை சம்பவங்கள் தடுத்து நிறுத்தும் வகையில், திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தீபா தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ஆந்திர எல்லை கிராமங்களில் பணியாற்றி வரும் வருவாய்த்துறையினர் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் தீபா கூறியதாவதாவது: ஆந்திராவிலிருந்து எல்லைப் பகுதிகள் வழியாக சாராயம் மற்றும் போதை பொருள் கடத்தி வந்து தமிழக கிராமங்களில் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க போலீசாருக்கு வருவாய்த் துறையினர் உதவியாக இருக்க வேண்டும்.

கிராமங்களில் நடைபெற்று வரும் குற்ற சம்பவங்கள் குறித்து கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மூலம் தகவல் தெரிந்துக்கொண்டு விரைந்து நடவடிக்கையின் மூலம் குற்ற செயல்கள் தடுக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது, திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ், தாசில்தார் மதியழகன், பயிற்சி டிஎஸ்பி தர்ஷிகா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மதியரசன், தர்மலிங்கம், ராஜகோபால், மலர், சப் இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி, இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post போதை பொருட்கள் குறித்து வருவாய்த்துறையினருக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: