சென்னை: மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு புகையிலை விளம்பரங்களில் நடிக்க தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது பாராட்டத்தக்கது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புகையிலை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க பெருந்தொகையை ஊதியமாகத் தருவதாக ஆசை காட்டப்பட்ட போதிலும், சமூகக் கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது.புகையிலை நிறுவன விளம்பரங்களில் தாம் நடித்தால், அதன் மூலம் உந்தப்பட்டு தமது ரசிகர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.