ஒலிம்பிக்சுக்கு பிறகு சார்ல்ஸ்டனில் பென்சிக் சாம்பியன்

சார்ல்ஸ்டன்: டோக்கியோ ஒலிம்பிக்சில் தங்கம் வென்ற சுவிஸ் வீராங்கனை  பெலிண்டா பென்சிக், ஆறேழு மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக கிரெடிட் ஒன் சார்ல்ஸ்டன் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். பைனலில் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபருடன் (27வயது, 10வது ரேஙக்) மோதிய பென்சிக் (25வயது, 21வது ரேங்க்) 6-1, 5-7. 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 35 நிமிடங்களுக்கு நீடித்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம்  டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பிறகு, பென்சிக் வெல்லும் முதல் சாம்பியன் பட்டம் இது. அதற்கு இடையில் மயாமி ஓபனில் அரையிறுதி வரை முன்னேறியதே சிறந்த செயல்பாடாக இருந்தது. தரவரிசையில் முன்னேற்றம்: இந்த வெற்றியின் மூலம் ஒற்றையர் தரவரிசையில் 21வது இடத்தில் இருந்த பென்சிக் 8 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்துள்ளார். ஆன்ஸ் ஒரு இடம் முன்னேறி 9வது இடத்தில் உள்ளார்.

Related Stories: