தாய்லாந்திற்கு இன்ப சுற்றுலா சென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே, அங்கு கடந்த 4ம்தேதி மாரடைப்பால் இறந்தார். இது உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து வார்னேவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து, அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் வார்னேவின் நெருங்கிய நண்பரான ரிக்கி பாண்டிங் நிருபர்களிடம் கண்ணீர்மல்க கூறியதாவது:- நான் தூங்கி எழுந்து மனைவி, குழந்தைகளுடன் விளையாட செல்ல தயாராக இருந்தபோது எனது போனை எடுத்துப் பார்த்தேன். அப்போது அதில் வந்திருந்த ஒரு மெசேஜை பார்த்தேன்.