முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் மரணம் இயற்கையானது: தாய்லாந்து போலீசார் விளக்கம்

தாய்லாந்து: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் மரணம் இயற்கையானது என உறுதி செய்த பிரேத பரிசோதனை முடிவு தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மாஜி சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே (52), தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு விடுதியில் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார். வார்ன் தனது சொந்த மைதானத்தில் வரலாற்று 700வது டெஸ்ட் விக்கெட் உட்பட பல கிரிக்கெட் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். வார்னேவின் மறைவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், வார்னேவுக்கு ஆஸ்துமா மற்றும் இதய நோய் இருந்ததாகவும், இறப்பதற்கு முன் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தகவல் பரவிய நிலையில், தாய்லாந்து போலீசார் விளக்கம் அளித்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் வார்னேவின் மரணம் இயற்கையானது என உறுதி செய்த பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பிறகு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மேலும், விசாரணை அதிகாரிகள் அந்த அறிக்கையின் சுருக்கமான வடிவத்தை வழக்கறிஞர்களிடம் ஒப்படைப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: