11 மாவட்ட மேயர், துணை மேயர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை, காஞ்சிபுரம், தாம்பரம், ஆவடி, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 21 மாநகராட்சிகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது. நேற்று முன்தினம் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடந்தது. இதில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, ேபரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் பொறுப்பேற்று கொண்டனர். பொறுப்பேற்று கொண்டதும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிலையில் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கோவை, தஞ்சாவூர், கரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த மாநகராட்சி மேயர், துணை மேயர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களின் வாழ்த்துக்களை பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி, சிறப்பாக மக்கள் பணியாற்ற வேண்டும் என்று தனது வாழ்த்தை பரிமாறிக்கொண்டார்.

Related Stories: