குழாய் இணைக்கும் பணி அயனாவரம் கழிவுநீர் உந்து நிலையம் இன்று செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை, ஜூன் 6: கழிவு நீர் உந்து குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளதால், அயனாவரம் கழிவுநீர் உந்து நிலையம் இன்று செயல்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அயனாவரம் கழிவுநீர் உந்து நிலையத்திலிருந்து பெரம்பூர் கழிவுநீர் உந்து நிலையத்திற்கு பிரதான உந்துகுழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணி இன்று காலை 11 மணி முதல் நாளை காலை 11 மணி வரை ( ஒரு நாள் மட்டும்) நடைபெற உள்ளதால், அயனாவரம் கழிவுநீர் உந்து நிலையம் தற்காலிகமாக செயல்படாது. எனவே, மண்டலம்-8, அண்ணா நகர் பகுதிகளுக்குட்பட்ட அயனாவரம் பகுதிகளில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை ஏற்பட்டால் அவசர தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற பகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ளலலாம். இதற்காக, அண்ணா நகர் பகுதி பொறியாளரை 81449 30908 என்ற எண்ணிலும், துணை பகுதிப் பொறியாளர்களை 81449 30221, 81449 30223 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post குழாய் இணைக்கும் பணி அயனாவரம் கழிவுநீர் உந்து நிலையம் இன்று செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: