பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பதை தவிர்க்க வேண்டும்: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சென்னை, ஜூன் 6 : பட்டாசு, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் எரிப்பதை தவிர்க்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு பொதுசுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பதாகைகள் வெயிடப்பட்டன. அந்த பதாகையில், சுற்றுச்சூழலை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், பாட்டில் உள்ளிட்ட பிளாஸ்டிக் தொடர்பான அனைத்து பொருட்களையும் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக துணிப் பை, ஸ்டீல் பாத்திரங்கள் பயன்படுத்த வேண்டும்.

மேலும் வீட்டில் தேவை இல்லாத போது டிவி, பேன், லைட்ைட அணைக்க வேண்டும். முடிந்த அளவு பேருந்து, ஆட்டோ போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். பட்டாசு, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் காற்றை தூய்மையாக வைக்க முடியும் என பொதுசுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தண்ணீரை தேவை இல்லாமல் வீணடிக்க கூடாது. வீட்டை துடைக்க, காய்கறி கழுவுவதற்கு மறுபயன்பாடு முறையில் தண்ணீரை பயன்படுத்த வேண்டும். அத்துடன் காகிதத்தை குறைவாக பயன்படுத்தி மரத்தை காக்க வேண்டும் என பொதுசுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

The post பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பதை தவிர்க்க வேண்டும்: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: