சென்ட்ரல் அருகே பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் நயன்தாரா பூஜை

சென்னை: நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் பல்வேறு கோயில்களுக்கு சென்று நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் சிறப்புபூஜைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு இறுதியில் அவர்களின் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் சென்னை சென்ட்ரல் அருகிலுள்ள பாடிகாட்  முனீஸ்வரர் கோயிலில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பூஜையில் கலந்துகொண்டனர். நயன்தாரா புதிதாக இன்னோவா கார் வாங்கியுள்ளார். அந்த காருக்கு பூஜை போட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: