துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் மகளிருக்கான துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ 2-6,7-6,6-0 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் செக்குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா காயம் காரணமாக விலகியதால் ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.