பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 98வது லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் 38-29 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. 16வது போட்டியில் 11வது வெற்றியை பெற்ற பாட்னா பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.