நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை செயளாலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை செயளாலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தேர்தல் நடத்தும் செயலாளர் சுந்தரவல்லி, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள், மற்றும் உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்னனுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். பிறகு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் காலை முதல் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.

இந்த ஆலோசனையில் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறஉள்ளது. அதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்ததும் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகம் முழுவதும் மாநில தேர்தல் ஆணையம் பதட்டமான வாக்குசாவடிகள்  கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிசிடிவி பொருத்துதல், தேர்தல் கண்காணிப்பு, கொரோனா பரவல் கட்டுப்பாடு ஆகியவவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வாக்கு இயந்த்திரங்களில் சின்னங்கள் பொருத்துவது, நாளைமுறையின் வேட்பு மனு பரிசீலனை உள்ளிட்ட பணிகளை திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனையில் கூறினார்.

Related Stories: