கலைஞர் பிறந்த நாளையொட்டி நடந்த ஆணழகன் போட்டியில் வென்றவருக்கு பரிசு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

ஆலந்தூர்: கலைஞரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆலந்தூரில் ஏஜேஎஸ் நிதி பள்ளி அரங்கில் ‘மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன்’ போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் தலைமை வகித்தார். ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக செயலாளர் பி.குணாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இறுதி போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, ‘மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன்’ போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் பங்கேற்று, கட்டுடல் திறமைகளை வெளிபடுத்திய போட்டியாளர்களில் முதல் இடம் பிடித்தவருக்கு ₹3 லட்சம் ரொக்க பரிசு மற்றும் தமிழ்நாடு ஆணழகனாக தேர்வு செய்யப்பட்ட கன்னியாகுமரியை சேர்ந்த மரியஜோஸ் என்பவருக்கு, 2 சவரன் தங்க செயின் மற்றும் நினைவு பரிசு, தங்க பதக்கம் போன்றவற்றை வழங்கி, பாராட்டினார்.

நிகழ்வில் உலக ஆணழகன் எம்.அரசு, கவுன்சிலர்கள் கே.பி.முரளிகிருஷ்ணன், சாலமோன், செல்வேந்திரன், வட்ட செயலாளர்கள் எம்.ஆர்.சீனிவாசன், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், ஜெ.நடராஜன், எம்.ஜி.கருணாநிதி, செய்யது அபுதாஹீர், ஆதம் லட்சுமிபதி, அணிகளின் சார்பாக கலாநிதி குணாளன், கே.ஆர்.ஆனந்தன், சுகுணா, கேபிள் ராஜா, மீன் மோகன், கோ.பிரவீன்குமார், விஜய்பாபு, தீனதையாளன், எஸ்.காஜா மொய்தீன், வாசிம் கான், தரணிவேந்தன், சுனில், திலீப், விக்கி.விஜி, கமல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post கலைஞர் பிறந்த நாளையொட்டி நடந்த ஆணழகன் போட்டியில் வென்றவருக்கு பரிசு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: