படைவீரர், முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்: வரும் 28ம் தேதி நடக்கிறது

சென்னை: படைவீரர், முன்னாள் படைவீரர் மற்றும் குடும்பத்தினருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படைவீரர், முன்னாள் படைவீரர் மற்றும் அவர் தம் குடும்பத்தினருக்கான இரண்டாம் காலாண்டிற்கான சிறப்புக் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கு கூட்டம் வரும் 28ம் தேதி காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியரின் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் சென்னை மாவட்டத்தை சார்ந்த படைவீரர், முன்னாள் படைவீரர் மற்றும் அவர் தம் குடும்பத்தினர்கள் தங்களது அடையாள அட்டை, அசல் படைவிலகல் சான்று மற்றும் தக்க ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரை தொலைபேசி வாயிலாக 044-2235 0780 தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) அ.அனுசுயாதேவி தெரிவித்துள்ளார்.

The post படைவீரர், முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்: வரும் 28ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: