வழக்கில் ஆஜராகாத தாம்பரம் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

சென்னை: போக்சோ வழக்கில் சாட்சியம் அளிக்க வராத தாம்பரம் இன்ஸ்பெக்டருக்கு, ராமநாதபுரம் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த குழந்தை திருமணம் மற்றும் போக்சோ வழக்கு திருப்புல்லாணி காவல் நிலையத்தில் பதியப்பட்டது. அப்போது, விசாரணை அதிகாரியாக கீழக்கரை இன்ஸ்பெக்டராக இருந்த பாலமுரளி சுந்தரம் இருந்தார்.

இவர், தற்போது சென்னை தாம்பரம் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த வழக்கு விசாரணை, ராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு பலமுறை ஆணை வழங்கியும் ஆஜராகாததால், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரத்திற்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மகிளா நீதிமன்ற நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.

The post வழக்கில் ஆஜராகாத தாம்பரம் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் appeared first on Dinakaran.

Related Stories: