பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சை ட்வீட்!: நடிகர் சித்தார்த்துக்கு சென்னை போலீஸ் சம்மன்..!!

சென்னை: சர்ச்சை ட்வீட் தொடர்பாக நடிகர் சித்தார்த் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளோம் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் சித்தார்த்திடம் எந்த முறையில் விசாரணை நடத்துவது என ஆலோசித்து வருவதாகவும் சங்கர் ஜிவால் குறிப்பிட்டிருக்கிறார். பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்த புகாரில் உத்தரவிடப்பட்டிருக்கிறது. சர்ச்சை ட்வீட் தொடர்பாக வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியிருந்தார்.

Related Stories: