பெருமாள் கோயில் உண்டியலில் திருடிய கொள்ளையன் கைது

திருவொற்றியூர், பிப்.16: திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு கடந்த 3ம் தேதி பெருமாள் கோயில் பின்புறம் நள்ளிரவு சுவர் ஏறி குதித்து உள்ளே வந்த மர்ம நபர் பெருந்தேவி தாயார் சன்னதியில் உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றுள்ளான். உண்டியலில் சுமார் ரூ.50ஆயிரத்திற்கும் மேல் பணம் இருந்திருக்கலாம் என கோயில் நிர்வாகத்தினர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்து திருடனை பிடிக்க தனிப்படை அமை க்கப்பட்டது. போலீசார் கோயில் பின்புறம் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்று அங்கு கோடங்கிபட்டி பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த சரவணகுமார் (35) என்பவரை சுற்றி வளைத்து பிடித்து திருவொற்றியூர் அழைத்து வந்தனர். விசாரணையில், சரவணகுமார் கார், வேன் டிரைவர் மற்றும் கொத்தனார் வேலை செய்வதாகவும் உண்டியலில் கொள்ளையடித்த ரூ.35 ஆயிரம் பணத்தை நெற்குன்றம் பகுதியில் உள்ள காதலி வீட்டில் தங்கி, செலவு செய்து விட்டு, சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் சரவணகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: