ஸ்ரீவிசாலம் சிட் ஃபண்ட் லிமிடெட் வாடிக்கையாளர்கள் ஆதரவுடன் 100வது ஆண்டை நோக்கி பயணம்: நிர்வாக இயக்குநர் தகவல்

காரைக்குடி: ஸ்ரீவிசாலம் சிட் ஃபண்ட் லிமிடெட் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, ஆதரவுடன் 100வது ஆண்டை நோக்கி வெற்றிப்பயணத்தை மேற்கொண்டு வருகிறது என நிர்வாக இயக்குநர் ஏஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பள்ளத்தூர் ஸ்ரீவிசாலம் சிட் ஃபண்ட் லிமிடெட் நிர்வாக அலுவலகத்தில் 75ம் ஆண்டு நிறைவுவிழா கொண்டாடப்பட்டது. நிர்வாக இயக்குநர் ஏஆர்.விஸ்வநாதன் தலைமை வகித்து பேசுகையில், ‘‘ஸ்ரீவிசாலம் சிட் ஃபண்ட் லிமிடெட் நிறுவனம் பாரம்பரியம், நீண்ட பயணத்தின் அடையாளமாக 75 ஆண்டுகள் நிறைவடைந்து 76ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இத்தருணத்தில் வணிகத்தின் விரிவாக்கம், வளர்ச்சியை அடுத்த மைல்கல்லாக கொண்டு செயல்பட துவங்கியுள்ளோம். அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் நிலையான பங்களிப்பை தொடர்ந்து வழங்குவதை உறுதியேற்றுக் கொண்டு செயல்படுவோம். வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, ஆதரவின் காரணமாகவே இந்த இலக்கை அடைய முடிந்தது. அவர்களின் தொடர் ஆதரவுடன் 100வது ஆண்டு வெற்றிப்பயணத்தை மேற்கொள்கிறோம். ஊழியர்களின் கடின உழைப்பு, அவர்களின் முயற்சி காரணமாகவே இந்த இலக்கை அடைய முடிந்தது’’’’ என்றார். நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ஏஆர்.மீனாட்சி, சித.நடராஜன், ஏஆர்.உமாபதி மற்றும் மேலாளர்கள், அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிளைகளிலும் 75ம் ஆண்டு நிறைவுவிழா கொண்டாடப்பட்டது.

Related Stories: