ராஞ்சி: கேப்டன் கூல் என வர்ணிக்கப்படுபவர் இந்திய அணியின் மாஜி கேப்டன் டோனி. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான இவர் தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளையாகவும் கருதப்படுகிறார். இந்நிலையில் டோனி நடு வீட்டில் குதிரையுடன் விளையாடுவது போன்ற படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அசைவ உணவு வகைகளை விரும்பி சாப்பிடும் டோனி இயல்பாகவே விலங்குகள் மீது ப்ரியம் கொண்டவர். இதை மெய்பிக்கும் விதமாக தனது வீட்டில் பஞ்சவர்ண கிளி, விதவிதமான நாய் வகைகளை வளர்த்து வருகிறார்.
