இலங்கை வீரர் மதீஷா பதிரனாவை ரூ.18 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.18 கோடிக்கு பதிரானா ஏலத்தில் எடுக்கப்பட்டார். பதிரானாவை ஏலத்தில் எடுக்க டெல்லி, லக்னோ இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் கொல்கத்தா அணி வாங்கியது
