போக்குவரத்து நிர்வாகம் அறிவிப்பு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் சங்கத்துக்கு ஒருவர் பங்கேற்கலாம்

சென்னை: தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் அரசு போக்குவரத்துக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். 2020ம் ஆண்டு 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையானது வரும் 29ம் தேதி மநடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா காரணமாக எப்போதும் போல் இல்லாமல் தொழிற்சங்கம், பேரவை சார்பில் ஒரு பிரதிநிதி மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொழிற்சங்கத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையானது வரும் டிச.29ம் தேதி காலை 11 மணிக்கு, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு அறிவுறுத்தலின்படி சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டியுள்ளதால், இப்பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கம், பேரவை சார்பில் தலா ஒரு பிரதிநிதி மட்டும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: