கார்த்திகை மாத பௌர்ணமியையொட்டி சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்த்தூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்கதர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்த்தூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் பௌர்ணமி, அம்மாவாசை நாட்களில் பக்த்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெய்த தொடர் மழையினால் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. இதன் காரணமாக மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது மழை குறைந்திருப்பதால் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் 19-ம் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மலைக்கோயிலுக்கு செல்லஅனுமதி வழங்கப்பட்ட நிலையில் நீரோடைகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மழை  பெய்தால் பக்த்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: