மாட்ரிட்: டேவிஸ் கோப்பைக்கான ‘ஏ’ குரூப்பில் ஸ்பெயின், ரஷ்யா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. நேற்று நடந்த 2வது ஒற்றையர் போட்டியில் ஈக்வடாரின் எமிலியோ கோமசை 6-0, 6-2 என நேர் செட்களில் ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ் வீழ்த்தினார். இதன் மூலம் குரூப் ஏ பிரிவில் ரஷ்யா முதலிடத்தை பிடித்துள்ளது. முன்னதாக நடந்த முதலாவது ஒற்றையர் போட்டியில் ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரப்லெவ் 6-3, 4-6, 6-1 என 3 செட்களில் ஈக்வடாரின் முன்னணி வீரர் ராபெர்ட்டோ குவிராசை போராடி வீழ்த்தினார்.