இந்தோனேஷியா ஓபன் காலிறுதியில் சிந்து

பாலி: இந்தோனேசியாவின் பாலி தீவில்  இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் போட்டி நடந்து வருகிறது. அங்கு நேற்று நடந்த 2வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து(26வயது, 4வது ரேங்க்), ஜெர்மனி வீராங்கனை யுவோன் லீ(23வயது, 11வது ரேங்க்) ஆகியோர் மோதினர். முன்னணி வீராங்கனையான சிந்து அதிரடியாக விளையாடி 37 நிமிடங்களில் 21-12, 21-18 என நேர் செட்களில்  யுவோனை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் சிந்து காலிறுதிக்கு  முன்னேறியுள்ளார். இன்று நடைபெறும் காலிறுதியில் கொரியா வீராங்கனை சிம் யுஜின்(22வயது, 54வது ரேங்க்) உடன் மோத உள்ளார். அதேபோல் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி இணை 21-15, 19-21, 23-21 என்ற புள்ளி கணக்கில் கொரியாவின்  காங் மி்ஹூயூக், சியோ செவூன்ஜி இணையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

Related Stories: