தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி நாளை பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக் பதவி வகித்து வந்த சஞ்சீப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

  கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை காலை 9.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, புதிய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். தொடர்ந்து  சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், சென்னை வழக்குரைஞர்கள் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

Related Stories: