உத்தமபாளையம் அருகே மெயின் ரோட்டில் களிமண் குவியலால் விபத்து அபாயம்

உத்தமபாளையம் : உத்தமபாளையம் அருகே, அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் காக்கில்சிக்கையன்பட்டி கிராமம் உள்ளது. இந்த ஊரில் உள்ள நெடுஞ்சாலை கம்பம், குமுளிக்கு செல்லும் முக்கிய நெடுஞ்சாலையாகும். இப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வயல்களில் அறுவடை செய்த நெல்மணிகளை டிராக்டர்கள், மினி லாரிகள் கொண்டு வருகின்றனர். இந்த வாகனங்களின் டயர்களில் சிக்கும் களிமண் குவியல், குவியலாக நெடுஞ்சாலையில் சிதறிக் கிடக்கின்றன.

இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள், இதை அறியாமல் விபத்தில் சிக்குகின்றனர். டூவீலர்களில் வருபவர்கள் பிரேக் அடித்தால், களிமண்ணில் டயர் வழுக்கி கவிழும் நிலை உள்ளது. இதை அப்புறப்படுத்த மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன. குறிப்பாக உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, காக்கில்சிக்கையன்பட்டி, க.புதுப்பட்டி பகுதி நெடுஞ்சாலைகளில் களிமண் குவியல்கள் சிதறிக் கிடக்கின்றன. இதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: