‘லைட் இட் பிங்க்’ புற்றுநோய் தகவல் மையம் துவக்கம் புற்றுநோய்க்கு 13 நிமிடத்திற்கு ஒருவர் பலி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை:தமிழ்நாட்டின் முன்னணி மருத்துவமனையாக விளங்கும் விஎஸ் மருத்துவமனையும் மருத்துவ தொழில்நுட்ப தளமான கார்கினோஸ் ஹெல்த்கேர் நிறுவனமும் புற்றுநோய்க்கு எதிரான போரில் கைகோர்த்துள்ளனர். ‘லைட் இட் பிங்க்’ என்று பெயரிடப்பட்டுள்ள புற்றுநோய் தகவல் மையம் துவக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான  ரிப்பன் மாளிகை இளஞ்சிவப்பு ஒளிவெள்ளத்தில் அலங்கரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன், எபினேசர் ஆகியோர் முன்னிலையில் பிரத்யேக புற்றுநோய் தகவல் மையம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது:  கடந்த 2020ம் ஆண்டில் ஒரு கோடிக்கும் மேலான உயிர்களை புற்றுநோய் பலிவாங்கியுள்ளது. இதில் 6,85,000 பேர் மார்பக புற்றுநோய்க்கு ஆளானவர்கள். நான்கு நிமிடத்திற்கு ஒரு இந்தியர் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகிறார். 13 நிமிடத்திற்கு ஒருவர் இந்த நோய்க்கு பலியாகிறார்கள்.

இது குறித்து அனைவரும் அறிந்து கொண்டு, துவக்க நிலையிலேயே நோயை கண்டறிந்து அதனை முற்றிலும் குணமாக்க முனைய வேண்டும் என்று பேசினார். இதில், விஎஸ் குழும மருத்துவமனை நிறுவனர், தலைவர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியன், காரன்கினோஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை வணிக அதிகாரியுமான சுரேஷ் வெங்கடரமணி ஆகியோர் பங்கேற்று பேசினர். 

Related Stories: